இந்தியா ஏ கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. முதல் போட்டி வருகிற 17ம்தேதி முதல் 20ம்தேதி வரை ரஸ்டன்பர்க் நகரிலும் 2வது டெஸ்ட் 24ம்தேதி முதல் 27ம்தேதி வரை பிரிட்டோரியா நகரிலும் நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்ரிக்கா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் டும்னி, பார்னல் சேர்க்கப்பட்டுள்ளனர். டும்னி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தார்.