Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
14
Aug
அகல ரயில் பாதை பணி துவங்க கோரி திருவாரூரில் 10 இடங்களில் இந்திய கம்யூ. உண்ணாவிரதம்


திருத்துறைப்பூண்டி:அகல ரயில் பாதை பணிகளை உடனடியாக துவங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் இன்று 10 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து கோடியக்கரை வரையிலும் உள்ள மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டியில் எம்எல்ஏ உலகநாதன் தலைமையில் உண்ணாவிரதம் துவங்கியது. திருவாரூரில் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வராசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஆலத்தம்பாடியில் ஒன்றிய செயலாளர் வக்கீல் வையாபுரி, மணலியில் விவசாய தொழிலாளர் மாவட்ட செயலாளர் ஞானமோகன், மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் நேதாஜி ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. முத்துப்பேட்டையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன் தலைமையில் போராட்டம் துவங்கியது.

உதயமார்த்தாண்டபுரத்தில் ஒன்றியகுழு துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, பாண்டியில் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சந்திரசேகர ஆசாத் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரதங்களில் அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran