வயதில் மூத்த நடிகருடன் நடிப்பதில் கவலை இல்லை இஷா தல்வார்
சென்னை:‘வயதில் மூத்த நடிகருடன் நடிப்பதால் கவலை இல்லை’ என்றார் இஷா தல்வார்.தமிழில் ‘தில்லுமுல்லு படத்தில் நடித்தவர் இஷா தல்வார். இவர் கூறியதாவது:‘தட்டத்தின் மறையத்து என்ற மலையாள படத்தில்தான் அறிமுகமானேன். அதற்கு பிறகுதான் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வந்தது. திரையுலகுக்கு வந்து 1 வருடத்துக்குள் 6 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் ‘பால்யகலாஷகி படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்கிறேன். என்னைவிட வயதில் மூத்த நடிகருடன் நடிப்பது ஏன் என்கிறார்கள். என்னைப் போன்ற புதுமுகங்களுக்கு மம்மூட்டி போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். சூப்பர் ஸ்டார் நடிகர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு இதன்மூலம் நனவாகி இருக்கிறது. வயது வித்தியாசம் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னுடைய கதாபாத்திரத்துக்கான நியாயத்தை இயக்குனர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.