கோப்பை வென்றார் செரீனா கனடாவின் டொரன்டோ நகரில் பெண்களுக்கான ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடந்தது. இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ருமேனியாவின் சொரானா கிறிஸ்டியும் மோதினர். செரீனாவின் ஆட்டம் அனல் பறந்தது. அவரது ஆட்டத்திற்கு கிறிஸ்டியால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இறுதியில் செரீனா வில்லியம்ஸ் 6&2, 6&0 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியை தோற்கடித்து ரோஜர்ஸ் கோப்பையை வென்றார். இந்த ஆண்டு செரீனாவுக்கு கிடைத்த 8வது பட்டம் இதுவாகும். மார்ட்டினா நவரத்திலோவா, கிறிஸ் எவர்ட், ஸ்டெபிகிராப், லின்ட்சே டேவன்போர்டு ஆகி யோர் மட்டுமே ஒரே ஆண்டில் அதிக பட்டங்களை வென்றவர்கள் ஆவர். இந்த வெற்றி மூலம் செரீனா இவர்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.