Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
12
Aug
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் நடால் சாம்பியன்


கனடாவில் மான்ட்ரியல் நகரில் ரோஜர்ஸ் கோப்பைக்கான மான்ட்ரியல் மாஸ்டர்ஸ் ஓபன் டென் னிஸ் போட்டி நடந்தது. இதன் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும், கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக்கும் மோதினர். கனடா ஓபன் போட்டியில் 1956ம் ஆண்டு ராபர்ட் பெட் டார்ட் என்பவர் வெற்றி பெற்றார்.

அதன்பின்னர் கனடா வீரர்கள் யாரும் இறுதிப்போட்டிக்கு நுழையவில்லை. தற்போதுதான் ராவ்னிக் இறுதிபோட்டியில் நுழைந்துள்ளார். இதனால் அவருக்கு உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவு அமோக மாக இருந்தது. என்றாலும் நடாலின் ஆட்டம் அனல் பறந்தது. அவருடைய ஆட்டத்திற்கு ராவ்னிக் கால் ஈடுகொடுக்க முடியவில்லை. நடால் 6&2, 6&2 என்ற நேர்செட்டில் ராவ்னிக்கை வீழ்த்தி மான்ட்ரியல் மாஸ்டர்ஸ் ரோஜர்ஸ் கோப்பையை வென்று சாம்பியன் பட் டத்தை கைப்பற்றினார்.

இந்த ஆண்டில் நடால் கைப்பற்றும் 8வது கோப்பை இதுவாகும். இதுவரை அவர் 58 கோப்பைகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராவ்னிக் தோல்வியடைந்தாலும் இறுதிப்போட்டிக்கு அவர் நுழைந்ததால் டென்னிஸ் தரவரிசையில் அவர் 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் 10 இடத்தில் உள்ள வீரர்களில் ராவ்னிக் தான் இளம்வீரர் ஆவார். அவருக்கு வயது 22 தான். 4வது இடத்தில் இருந்த நடால் இந்த வெற்றி மூலம் 3வது இடத்திற்கு முன்னேறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran