தமிழுக்கு வருகிறார் மிதுன் சக்ரவர்த்தி
சென்னை:கோலிவுட் ஹீரோக்கள் நேரடி இந்தி படங்களில் நடிப்பது போல், பாலிவுட் ஹீரோக்கள் நேரடி தமிழ் படங்களில் நடிப்பது குறைவு. கமலின் அழைப்பை ஏற்று, ‘ஹே ராம் படத்தில் நடித்தார் ஷாருக்கான். அதுபோல் ஜாக்கி ஷெராப்பும் தமிழில் நடித்திருக்கிறார். அமிதாப் தமிழில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தாலும் இதுவரை நடிக்கவில்லை. சஞ்சய் தத் தமிழில் நடிக்க விருப்பமில்லை என்று வெளிப்படையாகவே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், டான்ஸ் சக்ரவர்த்தி என்று பாலிவுட்டில் பெயர் பெற்ற மிதுன் சக்ரவர்த்தியை, ‘யாகாவாராயினும் நாகாக்க என்ற படத்தில் நடிக்க கேட்டார் இயக்குனர் சத்யபிரகாஷ். முதலில் தயக்கம் காட்டிய மிதுன், கதையை கேட்ட பிறகு படத்தில் இதுவொரு முக்கிய கதாபாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார். ஹீரோவாக ஆதி நடிக்கிறார். மேலும் பசுபதி, மும்பை மாடல் நிக்கி, நாசர், நரேன், ரிச்சா பாலோட் நடிக்கின்றனர். பிரசன்னா, பிரவின் இசை. ஷாம் ஒளிப்பதிவு. ரவிராஜா பினிஷெட்டி தயாரிக்கிறார்.