கமிஷன் கொடுத்து பட வாய்ப்பு பிடிக்கிறேனா? டாப்ஸி கோபம்
சென்னை:மேனேஜருக்கு கமிஷன் தந்து பட வாய்ப்பு பிடிக்கும் ஆள் நானில்லை என்றார் டாப்ஸி.‘ஆடுகளம், ‘வந்தான் வென்றான் படத்தை தொடர்ந்து, ‘ஆரம்பம், லாரன்ஸ் இயக்கும் ‘முனி பார்ட் 3 படங்களில் நடிக்கிறார் டாப்ஸி. தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். இந்தி பட வாய்ப்பு பிடிக்க மும்பையில் பிராஞ்ச் ஆபீஸ் அமைத்தும், மேனேஜருக்கு கமிஷன் கொடுத்தும் வாய்ப்பு தேடுவதாக கிசுகிசு பரவியது. இதை கேட்டு கோபம் அடைந்தார் டாப்ஸி.
அவர் கூறியது: இந்தியில் சஸ்மி பதூர் படத்தில் நடித்தேன். நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. மும்பையில் நான் பிராஞ்ச் ஆபீஸ் அமைத்தும், மேனேஜருக்கு கமிஷன் கொடுத்தும் பட வாய்ப்பு தேடுவதாக கிசுகிசு எழுதுகிறார்கள். மேனேஜர் என்பவர் முறைப்படுத்தி கால்ஷீட் தந்து எந்த குழப்பமும் இல்லாமல் ஷூட்டிங்கில் பங்கேற்க வைப்பதுதான். அதை விட்டுவிட்டு நடிகைக்கு வாய்ப்பு பிடிக்கும் வேலை கிடையாது.
அதுபோன்ற நடிகை நான் அல்ல. என்னை தேடி வரும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன். அதை மாற்றி கொள்ள மாட்டேன். எனது வேலையில் நான் திருப்தியாக இருக்கிறேன். பட வாய்ப்புகளும் வருகிறது. இப்படியிருக்க கமிஷனுக்கு மேனேஜரை எதற்கு அமர்த்த வேண்டும் அல்லது பிராஞ்ச் ஆபீசை ஏன் திறக்க வேண்டும். கிசுகிசு எழுதினாலும் அதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.இவ்வாறு டாப்ஸி கூறினார்.