Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
10
Aug
விடுதியில் அழகிகளுடன் உல்லாசம் போலீஸ்காரர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு தஞ்சாவூரில் பரபரப்பு


தஞ்சை:தஞ்சை விபசார விடுதியில் அழகியுடன் இருந்த போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சை புதியபஸ் நிலையம் பகுதியில்  விபசாரம் நடைபெறுவதாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  இன்ஸ்பெக்டர் சிவராமன், எஸ்.ஐகள் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலைய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 திருவேங்கடம் நகரில் உள்ள ஒரு வீட்டில் அறிமுகம் இல்லாத ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டிற்குள் திடீரென போலீசார் நுழைந்து அதிரடியாக சோதனையிட்டனர்.

 அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. அழகிகளுடன் இருந்த வடுவூர் அருண்காந்தி(26), நீடாமங்கலம் காமராஜர் காலனி குரு (28), மதுக்கூர் கீழக்குறிச்சி பழனிவேல்(32), அவர்களுடன் இருந்த விபசார பெண்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.  அருண்காந்தி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். கைதான போலீஸ்காரர் உள்பட 3 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். விபசார பெண்கள் 3 பேரும் திருச்சி அரசினர் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran