அமெரிக்காவில் பயங்கரம் விமான விபத்து: 3 பேர் பரிதாப பலி
நியூயார்க்:அமெரிக்காவில் விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகினர். அமெரிக்காவின் நியூஜெர்சி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. கனெக்டிகட் விமான நிலையம் அருகே தரையிறங்குவதற்காக அந்த விமானம் தாழ்வாக பறந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமான நிலையத்தின் அருகில் இருந்த வீட்டின் மீது மோதி நொறுங்கியது. இதில் விமானமும், வீடும் தீப்பற்றி எரியத் தொடங்கின. மிகப் பெரிய வெடி சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரி ஜோசம் மதுரோ கூறுகையில், இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவரும், வீட்டில் இருந்த சிறுமி உள்பட 3 பேரும் மாயமானது தெரிய வந்துள்ளது. அவர்களது நிலை என்ன என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். விமானம் மோதியதில் அருகருகே இருந்த 2 வீடுகளும் தீப்பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.