தயான்சந்த் விருது கவாஸ்கர், அமிர்தராஜுக்கு இல்லை
விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தயான்சந்த் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்த கவாஸ்கருக்கும், முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜுக்கும் கிடைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் விருது குழுவினர் இவர்கள் பெயரை தேர்வு செய்யவில்லை. அவர்கள் முன்னாள் ஹாக்கி வீரர் செய்யது அலி, தடகளத்தில் சிறந்து விளங்கிய டிசோசா, முன் னாள் மல்யுத்த வீரர் அனில்மான் மற்றும் மாற்றுதிறனாளி வீரர் கிரிராஜ் சிங் ஆகியோரை தேர்வு செய்துள்ளனர்.
இந்த மாத இறுதியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கவாஸ்கரும், விஜய் அமிர்தராஜும் அவர்கள் விளையாடி கொண்டிருக்கும் சமயத்திலேயே அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தயான்சந்த் விருது மறுக்கப்பட்டதாக தெரிகிறது.