சென்னை: இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் காதலா என்றதற்கு நழுவல் பதில் அளித்தார் சார்மி. ‘காதல் அழிவதில்லை, ‘ஆஹா எத்தனை அழகு, ‘காதல் கிசு கிசு, படங்களில் நடித்ததுடன் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் சார்மி. அதேபோல் ‘வேட்டைக்காரன்‘, ‘சிங்கம்‘ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்கள் உள்பட ஏராளமான தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தேவி ஸ்ரீபிரசாத். இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் சார்மியின் சகோதரர் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சகோதரர் நிச்சயதார்த்தம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சார்மி மகிழ்ச்சி வெளியிட்டிருக்கிறார். இதையடுத்து, ‘சார்மியின் திருமணம் எப்போது? என்று டோலிவுட்டில் கேட்க தொடங்கி உள்ளனர். சக ஹீரோயின்கள் ஆதிக்கத்தால் சார்மிக்கு பெரிய அளவில் படங்கள் ஒப்பந்தம் ஆகவில்லை. இதனால் அவரது திருமணம் விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சார்மியும், இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தும் காதலிப்பதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் தேவி ஸ்ரீபிரசாத்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அனுப்பிய மெசேஜில், ‘சுத்தமான ஆத்மாபோல் உங்களின் இசை சுத்தமானது. தொடர்ந்து வெற்றிகள் குவிக்கட்டும்.
நான் சந்தித்தவர்களில் உங்களைப்போல் ஒரு சிறந்த மனிதரை சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் சார்மி. ‘தேவி ஸ்ரீ பிரசாத்தை காதலிக்கிறீர்களா? என்று சார்மியிடம் கேட்டால், ‘நான் சந்தித்தவர்களில் அவரைப்போல் ஒரு சிறந்த மனிதரை சந்திக்கவில்லை என்று சொன்னதையே சொல்லி நழுவல் பதில் அளித்தார்.