3 நாடுகள் கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவில் இந்திய ‘ஏ’ அணி
தென் ஆப்ரிக்காவில் ஆஸ்திரேலியா ஏ, இந்தியா ஏ, தென் ஆப்ரிக்கா ஏ அணிகள் இடையே ஒருநாள் போட்டி தொடர் நடக்கிறது. இதற்காக 16 பேர் அடங்கிய இந்திய அணி புஜாரா தலைமையில் தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. நாளை பிரிட்டோரியாவில் நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்திய ஏ அணியில் இளம் பேட்ஸ்மேன்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் பவுலிங்கில் சற்று வலிமை குறைவாகவே உள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடும் வீரர்கள் அடுத்ததாக டோனி தலைமையில் தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்று தெரிகிறது.
இந்திய அணி வீரர்கள் விவரம்: புஜாரா (கேப்டன்), தவான், முரளிவிஜய், ரோகித்சர்மா, சுரேஷ் ரெய்னா, ராயுடு, தினேஷ் கார்த்திக், ரகானே, சாஹா, பர்வேஷ் ரசூல், ஷாபாஸ் நதீம், முகமதுசமி, ஸ்டூவர்ட் பின்னி, ஐஷ்வர் பாண்டே, உனத்கட், சித்தார்த் கவுல்.இந்திய ஏ அணி 3 நாடுகள் தொடர் முடிந்தவுடன் அணி தென் ஆப்ரிக்காவுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.