‘எங்கேயும் எப்போதும் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. மகேஷ் ராவ் டைரக்ட் செய்கிறார். தமிழில் ஜெய், அனன்யா, அஞ்சலி நடித்திருந்தனர். இதில் அஞ்சலி ஏற்று நடித்த துணிச்சலான கதாபாத்திரத்தில் கன்னட நடிகை தீபா சன்னிதி நடிக்கிறார். இந்த வேடத்தில் அஞ்சலியே நடித்தால் நன்றாக இருக்கும் என கருதி, அவரிடம் கால்ஷீட் கேட்டார்களாம். கன்னட படத்துக்கு சம்பளம் குறைவாக கிடைக்கும் என்பதால் அஞ்சலி மறுத்துவிட்டாராம்.
சரண்ராஜ் வாரிசு
‘பாட்ஷா, ‘நீதிக்கு தண்டனை, ‘ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடித்திருக்கும் சரண்ராஜ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா, பெங்காலி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் நீண்ட நாட்களாக தலைகாட்டாமல் இருந்தார். தற்போது இவரது மகன் தேஜ்ராஜ் நடிக்க வருகிறார். விஸ்காம் படித்திருக்கும் தேஜ், நடனம், சண்டை என சினிமாவுக்கான எல்லா பயிற்சிகளும் பெற்றுவருகிறார். நடிப்பை பொறுத்தவரை பாலு மகேந்திராவின் நடிப்பு பள்ளியில் சேர்ந்து கற்றிருக்கிறார்.
மிருக சென்டிமென்ட்
சமீபகாலமாக தனுஷ் தனது படங்களில் மிருக சென்டிமென்ட் பின்பற்றுகிறார். ஆடுகளம் படத்தில் சண்டை கோழியும் கையுமாக வலம் வந்தார். ‘மரியான் படத்தில் கடலுக்கடியில் டைவ் அடித்து மீன் பிடித்ததுடன், பாலைவனத்தில் சிறுத்தையுடனும் நடித்தார். வரவிருக்கும் ‘நய்யாண்டி‘ படத்தில் புறாவுடன் நடிக்கிறார். இத்தனை படங்களில் மிருகம், பறவையுடன் நடித்தபோதும் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் சிக்கல் இல்லாமல் ரிலீஸ் ஆனதில் இயக்குனர்கள் சந்தோஷமாக உள்ளனர்.
லேட் ஏன்?
திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் சமீபகாலமாக நிறைய பட விழாக்களில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சில விழாக்களுக்கு விஐபிகள் வந்து மேடை ஏறியபிறகே இவர் ஆஜர் ஆகிறார். விரைவில் தனது இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள Ôநினைத்தது யாரோ பணியையும் கவனித்துக்கொண்டிருப்பதால் தனது வருகைக்கு காலதாமதம் ஆவதாக சமீபத்தில் நடந்த ‘ஆர்யா சூர்யா விழாவில் விளக்கம் அளித்தார்.