அனுஷ்கா பாணியில் லட்சுமிராய்
சென்னை:ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏக்கத்தை வெளியிட்டார் லட்சுமி ராய்.இது பற்றி அவர் கூறியதாவது:
தமிழில் இப்போது புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் ரசிகர்களை தொடர்பு கொள்வதிலிருந்து விலகவில்லை. இணைய தளம் மூலம் தினமும் அவர்களுடன் பேசுகிறேன். அவர்களின் கருத்தை அறிகிறேன். ஒரே குறை என்னவென்றால் அவர்களை நேரில் சந்தித்து பேச முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது.
தினம் தினம் என்னை புதிதாக ஏராளமான ரசிகர்கள் இணையதளத்தில் பின்தொடர்கிறார்கள். அவர்கள் எல்லாம் இத்தனை நாள் எங்கிருந்தார்கள், என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பது தெரியாது. ஆனால் அவர்களின் உறுதியான கருத்துக்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப்பற்றி என்னை நினைக்கிறார்கள், எந்த கதாபாத்திரத்தில் என்னை காண விரும்புகிறார்கள் என்பதும் தெரியவருகிறது. தெலுங்கில் கோடி ராமகிருஷ்ணா இயக்கும் ‘ராணி ரானம்மா‘ என்ற படத்தில் நடிக்கிறேன். ‘அருந்ததி‘ படத்தில் அனுஷ்காவுக்கு எப்படியொரு புதிய வரவேற்பை இயக்குனர் பெற்றுத்தந்தாரோ அதுபோல் எனக்கொரு புதிய இமேஜை இப்படம் பெற்றுத்தரும்.இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.