Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
05
Aug
இலங்கையுடன் 20&20 போட்டி தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தென் ஆப்ரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டி தொடரை இலங்கை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20&20 போட்டி நடந்து வருகிறது. பரபரப்பான முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. 2வது 20&20 ஆட்டம் ஹம்பன்தோடாவில் நடந்தது.

டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 20 ஓவரில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் குவித்தது. டேவிட்ஸ் 7, டிஹாக் 19, டூபிளஸ்சிஸ் 12, டும்னி 30, டிவிலியர்ஸ் 15, மில்லர் 36 ரன்களை எடுத்தனர். பர்னர் 10 ரன்களுடனும், வெய்சி 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் குலசேகரா, செனநாயகே தலா 2 விக்கெட்டையும், மலிங்கா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன்பிறகு 146 ரன் இலக்குடன் இலங்கை களமிறங்கியது. ஆனால் அவர்களால் தென் ஆப்ரிக்காவின் இலக்கை எட்ட முடியவில்லை.

சரியான நேரத்தில் தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் இலங்கை விக்கெட்டுகளை கைப்பற்றினர். 20 ஓவரில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 22 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது. இலங்கை தரப்பில் பெரேரா 21, ஜெயவர்த்தனே 6, சன்டிமால் 2, சங்ககரா 39, திரிமனே 18, மேத்யூஸ் 1, குலசேகரா 10 ரன்னும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது தென் ஆப்ரிக்க வீரர் மில்லருக்கு வழங்கப்பட்டது. கடைசி 20&20 போட்டி நாளை ஹம்பன்தோடாவில் நடக்கிறது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran