சாம்பியன் கோப்பையுடன் சமந்தா ஸ்டோசர். கலிபோர்னியா ஓபன் டென்னிஸ் சமந்தா சாம்பியன்
அமெரிக்காவில் நடந்த தெற்கு கலிபோர்னியா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரும், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரன்காவும் மோதினர். ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.
இதில் சமந்தா ஸ்டோசர் 6&2, 6&3 என்ற நேர்செட்டில் அசரன்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். அவர் காலிறுதியில் ரத்வன்ஸ்காவையும், அரையிறுதியில் பிரான்சின் வெர்ஜினி ரெசானோவையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் நிறைய போட்டிகளில் வெற்றி பெற இந்த வெற்றி எனக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்றார் சமந்தா. 2011 யு.எஸ். ஓபன் டென்னிஸ் சாம்பி யன் பட்டத்தை வென்ற பின்னர் சமந்தாவுக்கு கிடைத்த சாம்பியன் பட்டம் இதுவாகும்.