கவுதமியால் கமலுடன் நடித்தேன் பூஜா பேட்டி
சென்னைகமலுடன் நடிக்க கவுதமி வாய்ப்பு வாங்கித் தந்தார் என்றார் பூஜா.‘விஸ்வரூபம் படத்தில் கமல் ஜோடியாக நடித்திருப்பவர் பூஜா குமார். அவர் கூறியதாவது:அமெரிக்காவில் இருந்து என்னை ஜெயா பச்சன் அழைத்து வந்து அமிதாப் பச்சனின் ஏபிசிஎல் நிறுவனத்தில் பணியாற்ற வைத்தார். 2000ம் ஆண்டில் ‘காதல் ரோஜாவே என்ற படத்தில் நடித்தேன். பிறகு படிப்பதற்காக அமெரிக்கா சென்று விட்டேன். இணைய தளத்தில் என்னைப் பற்றிய தகவல் அறிந்த கவுதமி, கமலிடம் கூறி இருக்கிறார். விஸ்வரூபம் படத்தில் நடிக்க கமல் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்ததாக மேனேஜர் கூறியதும் மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
நான் பார்த்த முதல் இந்தி படம் ‘ஏக் துஜே கே லியே. அப்போது முதல் கமலை பிடிக்கும். என்னை படத்துக்கு தேர்வு செய்வதற்காக அவர் டெஸ்ட் வைத்தார். நடிக்க விருப்பமா என்றபோது உடனே ஒப்புக்கொண்டேன். என்ன கதை என்பது கூட எனக்கு தெரியாது. கமலுடன் நடிக்கிறோம் என்ற ஒரே காரணத்துக்காக எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. கடினமான டெஸ்ட்டுக்கு பின்தான் நான் தேர்வானேன். என்னை தமிழ் கற்கச் சொன்னார். தவறாக பேசியபோது அவர் திருத்தினார். ‘விஸ்வரூபம் 2 ரசிகர்களுக்கு மற்றொரு வித்தியாசமான அனுபவத்தை தரும்.