சென்னை ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். செல்வராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்தபோது ஆர்யா, அனுஷ்கா இடையே நட்பு மலர்ந்ததாகவும் இவர்கள் இருவரும் நெருங்கி பழகுவதாகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது ஆர்யா, அனுஷ்கா இருவரும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
விழாவில் ஆர்யா பேசியது:
செல்வராகவனின் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கும். அந்த விதத்தில் இரண்டாம் உலகம் வேறு மாதிரி இருக்கும். இந்த படம், இதில் நடித்த எல்லோருக்குமே சவாலான படமாக இருந்தது. ஷூட்டிங்கின்போது பல கஷ்டங்களை எதிர்கொண்டோம். அதையெல்லாம் தாண்டி படம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், ஒரே அணியாக இருந்து படக்குழு பணியாற்றியதுதான். கஷ்ட நேரங்களில் பட டீம் தன்னம்பிக்கை இழந்துவிடவில்லை. இந்த படத்தில் ஹீரோயினாக அனுஷ்கா நடித்துள்ளார். இந்த வேடத்தை அவரை விட்டால் யாராலும் நடிக்க முடியாது. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.