சிம்பு & தனுஷ் யார் திறமைசாலி?ரிச்சா கணிப்பு
சென்னை:சிம்பு, தனுஷ் இருவரில் யார் திறமைசாலி என்றதற்கு பதில் அளித்தார் ரிச்சா.சிம்புவுடன் ஒஸ்தி, தனுஷுடன் ‘மயக்கம் என்ன படத்தில் ஒரே நேரத்தில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய. இவர் கூறியது:தனுஷ், சிம்பு இருவரிடமும் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இருவரும் வெவ்வேறு குணாதிசயம் கொண்ட திறமைசாலிகள். இசையாக இருந்தாலும் நடிப்பாக இருந்தாலும் வெவ்வேறு கோணத்தில் சிந்திப்பவர்கள். இவர்கள் இருவரில் ஒருவரை திறமைசாலியாக தேர்ந்தெடுக்கச் சொன்னால் யாரை தேர்வு செய்வீர்கள் என்கிறார்கள்.
இப்படியொரு கேள்வியை என்னிடம் கேட்பது நியாயம் கிடையாது. இருவரிடம் நடித்தபோதும் நான் கேரக்டரை ரசித்து நடித்தேன். தற்போது தெலுங்கில் நாகார்ஜுனா நடிக்கும் ‘பாய் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதை வீரபத்ரன் இயக்குகிறார். பிரசன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். ஒரு சில தமிழ் படங்களை ஏற்க நான் மறுத்தது உண்மைதான். அதற்கு பல காரணம் இருக்கிறது. வெறும் பணத்துக்காக நான் நடிக்க வ¤ரும்பவில்லை. எனது தாய்மொழ¤யான பெங்காலியிலும் நடித்திருக்கிறேன். நல்ல வாய்ப்பாக இருந்தால் எந்த மொழியிலும் நடிப்பேன்.இவ்வாறு ரிச்சா கூறினார்.