சிபாரிசால் இயக்குனர்கள் நீடிக்க முடியாது : சிவா
சென்னை: ரஜினி நடித்த படம் ‘தில்லு முல்லு, அதேபெயரில் ரீமேக் ஆகிறது. இதில் சிவா, இஷா தல்வார் ஜோடி. இதுபற்றி சிவா கூறும்போது, ‘ஜெய் ஹிந்த் அல்லது ஏதாவது பேய் படம் ரீமேக் செய்யலாம் என்று எண்ணினோம். ஆனால் ரசிகர்களை சிரிக்க வைக்க தில்லு முல்லுவை தேர்ந்தெடுத்தோம். இதற்காக பாலசந்தரிடம் அனுமதி பெற்றோம். பிறகு ரஜினி, கமலை சந்தித்து கூறினோம். இருவருமே வாழ்த்து சொன்னார்கள். இப்படத்தை இயக்குவதற்காக இயக்குனர் பத்ரியை நான் சிபாரிசு செய்ததாக கூறினார்.
‘கலகலப்பு‘ படத்தில் அவர் எழுதிய வசனங்கள் சிரிக்க வைத்தது. அவரது திறமைதான் இப்படத்தை அவருக்கு தந்திருக்கிறது. திறமை இல்லாமல் யாரும் சினிமாவில் நீடித்துவிட முடியாது. ஒரு இயக்குனருக்கோ மற்ற யாருக்குமோ திறமை இருக்கிறதா? இல்லையா? என்பது ஷூட்டிங் தொடங்கிய 3 நாளில் வெட்ட வெளிச்சமாகிவிடும். ஹீரோயின் இஷா தல்வார், பிரகாஷ்ராஜ், சந்தானம், சத்யன், கோவை சரளா என பலர் நடித்திருக்கின்றனர். எஸ்.மதன் தயாரிப்பு. லஷ்மண் ஒளிப்பதிவு. எம்.எஸ்.விஸ்வநாதன்-யுவன் சங்கர் ராஜா இசை.