2வது சுற்றிலும் சானியா ஜோடி அசத்தல்
ரோம் டென்னிஸ் போட்டி 2வது சுற்றில் ஷரபோவா (ரஷ்யா) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ஹார்பினையும்(ஸ்பெயின்), விக்டோரியா அசரன்கா(பெல்லாரஸ்) 6-2, 6-0 என்ற கணக்கில் ஜூலியா ஜார்ஜையும்(ஜெர்மனி), நா லீ(சீனா) 6-3, 6-1 என்ற கணக்கில் சக நாட்டின் ஜி ஹெங்கையும் தோற்கடித்தனர். இரட்டையர் பிரிவில் சானியா(இந்தியா)பெத்தானி மேடக்(அமெரிக்கா) ஜோடி 6-4, 6-3 என் ற கணக்கில் சமந்தா ஸ்டோசர்(ஆஸி.) செவினோவ்(இத்தாலி) ஜோடியை வீழ்த்தியது.