Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
16
May
நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தேன்: நந்திதா பேட்டி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தேன் என்றார் நந்திதா.‘அட்டகத்தி‘ படத்தில் நடித்த நந்திதா கூறியது:
நான் பெங்களூரை சேர்ந்தவள். நடிகையாக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. ஆனால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் நடிகையாகியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். என் பெற்றோரிடம் பேசாமல் தனி அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். 3 நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். பிறகு நிபந்தனைகளுடன் என்னை நடிகையாக பெற்றோர் சம்மதித்தனர். படிப்பை முடித்துவிட்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஏற்றுக்கொண்டேன்.

‘அட்டகத்தி‘ பட வாய்ப்பு வந்தபோது ஏற்றுக்கொண்டேன். ‘நளனும் நந்தினியும்‘ விரைவில் வரவிருக்கிறது. ‘எதிர்நீச்சல்‘ படத்தில் மேக் அப் போடாமல் நடித்தேன். இரட்டை ஹீரோயின் கதை என்பதால் நான் நடிக்க மறுத்ததாக எழுதினார்கள். அது தவறு. என்ன வாய்ப்பு வந்தாலும் அதில் எனது கேரக்டர் என்ன என்பதை மட்டும்தான் பார்க்கிறேன். பிடித்திருந்தால் நடிக்கிறேன். ஒரு வருடத்துக்குள் 4 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன்.இவ்வாறு நந்திதா கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran