* ரஜினி நடிக்கும் ‘கோச்சடையான்‘ படத்தின் பாடல் காட்சி மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் படமாகி இருந்ததையும், அனிமேஷன் காட்சிகளையும் பார்த்த ஏ.ஆர்.ரகுமான், சவுந்தர்யாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
* சசிகுமார், லாவண்யா நடிக்கும் பிரம்மன் படத்தில் முக்கிய வேடத்தில் நான் ஈ சுதீப் நடிக்கிறார். இதில் அவர் வில்லன் கிடையாதாம்.
* லிங்குசாமி இயக்கும் சூர்யா படம் மற்றும் தெலுங்கு படங்கள் என 4 படங்களில் நடித்துவரும் சமந்தா இந்த ஆண்டு முழுவதுக்கும் கால்ஷீட் கொடுத்து முடித்ததால் அடுத்த பட கால்ஷீட் தருவதை நிறுத்தி வைத்திருக்கிறார். இதனால் அவர் அடுத்த ஆண்டில் திருமணம் செய்வார் என்று இண்டஸ்ட்ரியில் பேச்சு எழுந்துள்ளது.
* விமல், சிவா நடித்த ‘கலகலப்பு‘ படத்தின் 2ம் பாகம் உருவாக்குவதற்கு முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. இதற்கிடையில் இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அல்லாரி நரேஷ் நடிக்கும் இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா‘ பட ஹீரோயின் விசாகா நடிக்கிறார்.