Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
14
May
27 பந்தில் 66 ரன் விளாசல் வெற்றியை பறித்தார் பொல்லார்டு


ஐபிஎல்லில் நேற்றிரவு வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்&மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. ஷிகார் தவான் 41 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன் விளாசினார். கேமரூன் ஒயிட் 43, விகாரி 41, பார்தீவ் படேல் 26 ரன் எடுத்தனர். மும்பை தரப்பில் மலிங்கா 2, ஜான்சன் 1 விக்கெட் கைப்பற்றினர்.

179 ரன்கள் இலக்குடன் மும்பை அணி பேட் செய்தது. ஸ்மித் 21 ரன்னில் அவுட்டானார். சச்சின் 38 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். தினேஷ்கார்த்திக் 30, அம்பாதி ராயுடு 2 ரன்னில் கரன் ஷர்மா பந்தில் வீழ்ந்தனர். 16வது ஓவர் வரை ஆட்டத்தை சன் ரைசர்ஸ் அணி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அந்த சமயத்தில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 24 பந்துகளில் 62 ரன்கள் தேவைப்பட்டது. சன் ரைசர்ஸ் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொல்லார்டு திடீரென விஸ்வரூபம் எடுத்தார்.

பெரேரா வீசிய 17வது ஓவரில் பொல்லார்டு 3 சிக்சர்கள், 1 பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் ரோகித் ஷர்மாவும் 1 சிக்சர் அடித்தார். மொத்தம் இந்த ஓவரில் 29 ரன்கள் குவிக்கப்பட்டது. இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
18வது ஓவரை அமித் மிஸ்ரா வீசினார். இந்த  ஓவரிலும் சிக்சர்கள் பறந்தன. 3 சிக்சர்கள் உள்பட 21 ரன்கள் அடிக்கப்பட்டது. 2 ஓவர்களில் 50 ரன்கள் விளாசப்பட்டதால் மும்பை அணியின் பக்கம் வெற்றி சாய்ந்தது. 19வது ஓவரில் 5 ரன் சேர்க்கப்பட்டது. கடைசி 6 பந்தில் 7 ரன் தேவை என்ற நிலையில் பொல்லார்டு 2 சிக்சர்கள் விளாசி வெற்றியை வசப்படுத்தினார். முடிவில் 19.3 ஓவரில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பொல்லார்டு 27 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரியுடன் 66 ரன் விளாசினார். ரோகித் ஷர்மா 20 ரன் சேர்த்தார். ஆட்ட நாயகன் விருது பொல்லார்டுக்கு வழங்கப்பட்டது. மும்பை அணிக்கு இது 10வது வெற்றியாகும். இந்த வெற்றியால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. சன் ரைசர்ஸ் அணி 6வது தோல்வியை சந்தித்தது.

கேப்டன்ஸ் கார்னர்

ரோகித் ஷர்மா: இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. புள்ளிகள் பட்டியலில் கடைசி நேரத்தில் மல்லுக்கட்ட கூடாது என நினைத்தோம். பொல்லார்டு அதிரடியில் மிரட்டி விட்டார். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சச்சினின் காயம் எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியவில்லை.

கேமரூன் ஒயிட்: மீண்டும் ஒருமுறை நல்ல ஸ்கோரை எடுத்தோம். பொல்லார்டின் அதிரடியால் ஆட்டம் எங்கள் கையில் இருந்து சென்றுவிட்டது. அவருக்கு பந்துவீசுவது எளிதான விஷயம் இல்லை. பேட்டிங்கிற்கு மைதானம் அருமையாக இருந்தது. போதிய அளவில் நாங்கள் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை. அடுத்த 2 ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதில் வெற்றிகளை பெற்று பெங்களூருக்கு நெருக்கடி கொடுப்போம்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran