திருநின்றவூர் ஜெயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனை
திருவள்ளூர்:திருநின்றவூர் ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவன் நரேந்திரன் 1164 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார். பொருளியல், வணிக கணிதம், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவன் கார்த்திகேயன், 1161 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளார். கணினி அறிவியலில் 199 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மாணவி மகாஸ்ரீ 1161 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளார். வணிக கணிதம், கணக்குப்பதிவியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி வரலட்சுமி 1155 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார். பொருளியல், வணிக கணிதம், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தில் 200 மதிப்பெண் பெற்றுள்ளார். அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களை ஜெயா கல்விக்குழுமங்களின் தலைவர் கனகராஜ், செயலாளர் விஜயகுமாரி, துணை தலைவர் நவராஜ், நிர்வாக அறங்காவலர் டாக்டர் தீனா, முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.