Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
May
கேரவன் கேட்காத நடிகை சுந்தர்.சி பூரிப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: ‘கலகலப்பு‘ படத்தையடுத்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு‘ படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. படம் பற்றி அவர் கூறியதாவது:எனது படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை இந்த படத்திலும் எதிர்பார்க்கலாம். தீயா வேலை செய்யணும் குமாரு என்ற டைட்டில் வைத்தபோதே நல்ல வரவேற்பு இருந்தது. சித்தார்த் ஹீரோ.

ஹன்சிகா ஹீரோயின். ஷூட்டிங் முழுவதுமே ஒரு குடும்பம்போல் பணியாற்றினோம். சித்தார்த் எனது இளைய சகோதரர்போல் ஆகிவிட்டார்.  ஹன்சிகாவை ஜுனியர் குஷ்பு என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். அவர் குஷ்பு சாயலில் இருப்பது மட்டுமல்லாமல் அவரைப்போல் நல்ல நடிப்பையும் வெளிப்படுத்துகிறார். அவரது நேரம் தவறாமை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஜப்பானில் ஷூட்டிங் நடந்தபோது அவரது பொறுப்புணர்வு என்னை வியக்க வைத்தது. அவுட்டோர் ஷூட்டிங் எங்கு நடந்தபோதிலும் கேரவன் கேட்டது கிடையாது. நிறைய ஹீரோயின்கள் என் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களில் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தவர் ஹன்சிகாதான். சந்தானம், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நடன காட்சியில் குஷ்புவும் கவுரவ தோற்றத்தில் ஆட வேண்டும் என்று சக நட்சத்திரங்கள் கேட்டதையடுத்து அவரும் சில நடன அசைவுகளுக்கு ஆடினார். இசை சத்யா. ஒளிப்பதிவு  கோபி அமர்நாத். தயாரிப்பு குஷ்பு. வெளியீடு யுடிவி.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran