Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
May
எல்லை மீறி கவர்ச்சியாக நடிப்பதா? இணைய தளத்தில் ரசிகர்கள் தாக்கு பாமா ஷாக்


சென்னை: எல்லை மீறி கவர்ச்சியாக நடித்தது ஏன்? என்று பாமாவுக்கு இணைய தளத்தில் ரசிகர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அவர் ஷாக் ஆனார்.‘எல்லாம் அவன் செயல், ‘சேவற்கொடி படங்களில் நடித்திருப்பவர் பாமா. தமிழில் ‘ராமானுஜம்‘ என்ற படத்தில் நடிப்பதுடன் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாமா கன்னட படமொன்றில் குத்து பாடலுக்கு எல்லை மீறி கவர்ச்சியாக ஆடி இருக்கிறாராம். இதைப்பார்த்து ரசிகர்கள் இணைய தளத்தில் பாமாவை கடுமையாக விமர்சித்ததுடன், அவரது ஆட்டத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இது பற்றி பாமா கூறும்போது, கன்னட படத்தில் நான் நடித்திருந்ததற்கு இணைய தளத்தில் ரசிகர்கள் விமர்சித்திருந்ததை நானும் பார்த்தேன். என்னுடைய எல்லை என்ன என்பது எனக்கு தெரியும். ஒருபோதும் நான் எல்லை மீறி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். இருந்தாலும் அந்த விமர்சனங்களை படித்து ஷாக் ஆனேன். அதே சமயம், அதை ஏற்றுக்கொள்கிறேன். அதிலிருந்து பாடம் கற்றிருக்கிறேன். ஒன்றுமட்டும் உறுதி. என்னை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது. சினிமாவில் எனது பயணத்தை கவனத்துடனே நடத்திக் கொண்டிருக்கிறேன். தற்போது தமிழ் ஆங்கிலத்தில் உருவாகும் ‘ராமானுஜம்’ என்ற படத்தில் நடிக்கிறேன். கும்பகோணத்தில் இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்றார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,