தண்டவாள பராமரிப்பு இயந்திரம் பழுதானதால் திடீர் பரபரப்பு ரயில்கள் நிறுத்தம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே ரயில் தண்டவாள பராமரிப்பு பணியின¢போது இயந்திரம் பழுதானதால் பரபரப்பு நிலவியது. இதனால் சில ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.காஞ்சிபுரம்&செங்கல்பட்டு மார்க்கத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் ரயில் நிலைய முதன்மை பொறியாளர் நாகேந்திரன், இளநிலை பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் நேற்று மாலை காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணியை மேற்கொண்டனர்.
அப்போது, பராமரிப்பு பணியில் ஈடுபட்ட இயந்திரம் திடீரென பழுதாகி தண்டவாளத்தில் நின்றுவிட்டது. அதை அகற்ற முடியவில்லை. இதனால் அந்த வழித் தடத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு, பழுதான இயந்திரம் அப்புறப்படுத்தப்பட்டது. இதன்பிறகு ரயில் போக்குவரத்து சீரானது.