ரஜினி நடிக்கும் ‘கோச்சடையான்‘, தனுஷ் நடிக்கும் ‘மரியான்‘, சித்தார்த் நடிக்கும் படம் மற்றும் கவுதம் மேனன், ராஜீவ் மேனன் இயக்கும் படம் என 5 படங்களுக்கு இசை அமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பதிவு செய்யப்பட்டது. இதன் ஷூட்டிங் பிரமாண்ட அரங்கில் நடக்கிறது.
பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9‘ படம் கன்னடத்தில் ‘கேஸ் நம்பர் 18/9‘ என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. மகேஷ்ராவ் இயக்கும் இப்படத்தில் சிந்து லோக்னாத், நிரஞ்சன் ஷெட்டி, சுவேதா பண்டித் நடித்துள்ளனர்.