திருப்பாச்சூர் வெங்கடேஸ்வரா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ட கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கல்லூரி தலைவர் கே.சி. வாசுதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் எத்திராஜுலு, பொருளாளர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மோகன் குமார் வரவேற்றார். நிட்னா கிரியேட்டிவ்ஸ் நிறுவன மனிதவள மேம்பாடு முதுநிலை அலுவலர் பிரதீப் கொல்லு முகாமை துவக்கி வைத்து பேசினார். மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் செல்வி, ஆண்ட்ரு ஆகியோர் மாணவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தினர். டெக்ஸ்மோ இண்டஸ்ட்ரிஸ், மேக்னாஜ் இனோவேஷன்ஸ் ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ், ஆர்என் ஐ.டி சொல்யூஷன், சதர்லேண்ட், வெக்ட்ரா டெக்னோ சாப்ட், இன்படஸ், கிராம்டார் ஆகிய கம்பெனிகள் கலந்துகொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.
1500க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 301 பேர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். கல்லூரி தலைவர் வாசுதேவன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கினார். முடிவில் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் ஜேம்ஸ் நன்றி கூறினார். கல்லூரியில் வருகின்ற 29, மே 6ம் தேதிகளில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.