ஆவடி: ஆவடி அருகே கவரைப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகள் யாமினி (14). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார் யாமினி. கடந்த 4ம் தேதி கடைக்கு சென்ற யாமினியை காணவில்லை அவரை பற்றி விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் சித்ரா, ஆவடி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.