பொகாரோவில் 3 மாவோயிஸ்ட் கைது
பொகாரோ:பொகாரோவில் தலைமறைவாக இருந்த 3 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து கோமியா போலீஸ் டிஎஸ்பி பதாக் கூறியதாவது:
கடந்த 2004ல் கர்மா கிராமத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளிகளான குலாப் மகாடோ, டாலட் மகாடோ, தானேஷ்வர் மகாடோ ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். நேற்று போக்ரா மாவட்டம் சிதா பன்ஹா கிராமத்தில் பதுங்கியிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸ் விசாரணையின் போது தப்பிய மூவரும் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்கள்.