ஸ்ரீதேவி திடீரென்று தன் வீட்டு சமையல்காரர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறார். ‘நான் சொல்லும்வரை இனி வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது’ என்பதுதான் அது. அதுபோல் கணவர் போனிகபூர் திடீரென்று சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டாராம்.
‘தலைவா’ படத்தில் ராகினி நந்வானி, சமீபத்தில் சிவராத்திரி பின்னணியில் அமைக்கப்பட்ட அரங்கில் விஜய்யுடன் ஆடினார்.
‘பீட்சா’ படத்தின் 2ம் பாகமாக உருவாக உள்ளது ‘வில்லா’. தீபன் சக்ரவர்த்தி ஹீரோ. படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி தற்போது ‘சூது கவ்வும்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் ‘தில்லாலங்கடி’, ‘கொள்ளைக்காரன்’ படத்தில் நடித்திருக்கிறார்.
‘எவடு’ டோலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன் ஷூட்டிங்கிற்கு அதிகாலையிலேயே வரவேண்டி உள்ளதாம். ஷூட்டிங்குக்கு வந்தவுடன் கிரீன் டீ சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.