நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...
கோலிவுட்ல ஆக்டர் பிரதாப போத் நடிகருக்கு பெரிசா வாய்பில்லாததால முடங்கி கெடந்தாராம்... கெடந்தாராம்... ரொம்ப வருஷத்துக்கப்பறம் மல்லுவுட் பட சான்ஸ் கெடச்சி நடிச்சாராம். எப்படியும் ஸ்டேட் அவார்டு கிடைக்கும்னு நெனச்சிட்டிருந்தவருக்கு அவார்டு கிடைக்காதது ஷாக்காம். கேரக்டரோட ஒன்றி நடிச்சும் அவார்டு தரலயேனு சங்கடப்பட்டவர் இதுபத்தி அதிகாரிகிட்ட கேட்டாராம். அவரோ, ‘உங்க கேரக்டர் எனக்கு படத்துல பிடிக்கல. அதால அவார்டுக்கு தேர்வு செய்ய முடியலே’னு சொன்னாராம். கேரக்டர்ல ஒன்றி நடிச்சதாலதான் உங்களுக்கு பிடிக்கலே அப்படின்னா விருது ஏன் தரலேனு சண்டைக்கு போயிட்டாராம்... போயிட்டாராம்...
நட்சத்திர கிரிக்கெட் போட்டில வில்லன் நடிகர் சோனுக்கு அடிபட்டதால ரெஸ்ட்ல இருக்காராம்... இருக்காராம்... மூணுமாசத்துக்கு எந்திரிக்க கூடாதுன்னு டாக்டர் சொன்னதயடுத்து அவர புக் பண்ண தயாரிப்புங்க சோகமாயிட்டாங்களாம். அவர் இல்லாததால மத்த ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் வேஸ்ட் ஆகுதுனு சோன நடிகருக்கு பதிலா வேற வில்லன பிக்ஸ் பண்றாங்களாம். கடுப்பான சோனு நடிகர் உடம்புதான் முக்கியம். உங்க அட்வான்ஸ திருப்பி வாங்கிக்கங்கனு சூடா சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...
புதுபடம் ஒண்ணுல பரிணிதா மும்பை ஹீரோயின் நடிக்கறதா சொன்னாங்களாம்... சொன்னாங்களாம்... அவரோ எங்கிட்ட யாருமே கால்ஷீட் வாங்கலேனு மறுப்பு சொல்றாராம். ஆனா மதனான இயக்கமோ, ‘அவங்க மேனேஜர் டேட் கொடுக்கறதா சொன்னது நிஜம். இதுபத்தி சீக்கிரமே நடிகைகிட்ட நேர்ல பேசுவேன்’னு சொல்றாராம். மும்பைக்கு பறக்க முடிவு பண்ண இயக்கம் கையோட லம்ப்பா ஒரு அமவுன்ட்டும் கொண்டுபோறாராம். அமவுன்ட் கைமாறினா கால்ஷீட்டும் கன்பார்ம் ஆயிடும்னு இயக்கம் தரப்புல சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...
|