மணிரத்னம் தயாரித்து இயக்கிய ‘கடல் படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறி வினியோகஸ்தர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் படத்தை தாங்கள் ஏற்கனவே வேறு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்துகொடுத்திருப்பதால் நஷ்ட ஈடு தர முடியாது என்று மணிரத்னம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘நான் ஈ பட இயக்குனர் ராஜமவுலி தற்போது தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா நடிக்கும் ‘பாஹுபாலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் மகேஷ் பாபு படமொன்றையும் இயக்க உள்ளார். இந்நிலையில் நேரடி தமிழ் படமொன்றை இயக்க எண்ணியிருக்கும் ராஜமவுலி அதில் பிரசாந்த்தை ஹீரோவாக நடிக்க கேட்டிருக்கிறார்.
காதல் கலையில் கைதேர்ந்த சிம்பு, சித்தார்த் இருவரும் காதலர் தினத்தன்று தங்களது படத்தின் ஒரு பாடல் ஆல்பத்தை வெளியிடுகின்றனர். சிம்பு ‘வாலு படத்திலிருந்தும், சித்தார்த் ‘யாரோ இவன் படத்திலிருந்தும் இப்பாடல் ஆடியோ வெளியிட உள்ளனர்.
அரவிந்த் ராமலிங்கம் இயக்கும் ‘கர்மா என்ற படத்தின் டைட்டில் காட்சியின்போது திருக்குறள் ஒலிப்பதற்காக கவிஞர் வைரமுத்துவை பேசக் கேட்டிருக்கிறார் இசை அமைப்பாளர் வி.சி.கணேஷ்.