Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
08
Feb
அர்ஜென்டினாவில் அதிர்ச்சி : 12 வயது பள்ளி மாணவிக்கு பிரசவத்தில் இரட்டை குழந்தை


லண்டன்-: அர்ஜென்டினாவில் 12 வயது சிறுமி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவில் 9 வயது சிறுமி கடந்த வாரம் பெண் குழந்தை பெற்றெடுத்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அர்ஜென்டினாவை சேர்ந்த 12 வயது பள்ளி மாணவி ஒருத்திக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த பரபரப்பான விவரம் வருமாறு: அர்ஜென்டினா தலைநகர் பியூனர்ஸ் அயர்சில் இருந்து ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ளது சிலிசிட்டோ நகரம். இங்கு வசிக்கும் 12 வயது சிறுமியின் வயிறு வழக்கத்துக்கு மாறாக பெரிதாக இருந்தது. இதை பள்ளியில் கண்டுபிடித்த ஆசிரியர், பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அதன்பிறகு விசாரித்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கருக்கலைப்பு செய்ய முடியவில்லை. இந்நிலையில், பிரசவத்துக்கு 5 வாரங்கள் முன்னதாகவே சிசேரியன் மூலம் சிறுமிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் சிறுமிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. சமீபத்தில்தான் சிறுமி தனது 12வது பிறந்த நாளை கொண்டாடினாள். ஒரு வாரத்தில் அவளுக்கு இரட்டை குழந்தை பிறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் கர்ப்பம் தொடர்பாக 16 மற்றும் 20 வயது பையன்களை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறுமியின் 14 வயது சித்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பெற்றெடுத்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட சிறுமியின் பெயர் வெளியிடப்படவில்லை. இத்தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் சன் பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran