ஆக்ஷன் கிங் ஹீரோ படிப்படியா இமேஜை டெவலப் பண்ணாராம்... பண்ணாராம்... திடீர்னு பெல் இயக்கம் படத்துல சான்ஸ் வந்ததும் ஒப்புக்கிட்டாராம். இதுவரை நடிக்காத நெகடிவ் வேடத்துல நடிச்சவர், ரொம்பவே நம்பிக்கையா இருந்தாராம். ஆனா படம் பாத்த நட்புங்க அவர்கிட்ட வருத்தப்பட்டாங்களாம். இத்தன நாள் டெவலப் பண்ண இமேஜை இந்த படத்துல உடைச்சிட்டீங்களேன்னு சொன்னாங்களாம். நெகடிவா ரிசல்ட் அமைஞ்சதுல ஹீரோ நொந்துட்டாராம்... நொந்துட்டாராம்...
என் புருஷன் ஹீரோவா நடிக்கப்போறாருன்னு உயிர் ஹீரோயின் வாய் வலிக்க சொல்லிட்டிருந்தாராம்... இருந்தாராம்... அவரோட கனவு இப்ப பலிச்சிருக்காம். பாடகரான கணவர் இப்ப ஒரு படத்துல ஹீரோவா ஒப்பந்தம் ஆயிருக்காராம். ஏற்கனவே நடிப்பு பயிற்சி பெற்றிருக்கிற பாடகர், ஆரம்ப கட்டத்துல நடிக்க¤றதுக்குதான் வந்தாராம். ஆனா பாட்டு பாட்றவரா வாழ்க்கை திசை மாறிடுச்சாம். இப்ப இருக்கிற போட்டில களத்துல குதிச்சிருக்க¤றவர் எப்படி நீந்தி கரை சேரப்போறாரோன்னு சிலர் முணுமுணுக்கிறாங்களாம்... முணுமுணுக்கிறாங்களாம்...
நார்த், சவுத்னு வில்ல அவதாரம் எடுக்க¤ற பிரகாச நடிகர் டோலிவுட்ல திடீர்னு அம்மணமா நடிச்சி பரபரப்பை ஏற்படுத்திட்டாராம்... ஏற்படுத்திட்டாராம்... இந்த சீன நீக்கணும்னு பிரச்னை ஆனதுல பட இயக்கத்துக்கு என்ன செய்றதுன்னு புரியலையாம். விஷயம் சீரியஸ் ஆச்சினா முழுபடத்துக்கும் பிரச்னையாயிடும்னு கூட இருக்க¤றவங்க சொன்னாங்களாம். ஏற்கனவே வெந்து போயிருந்த இயக்கம், நெலமய புரிஞ்சிகிட்டு, உடனே அம்மண சீனை நீக்கிட்டாராம்... நீக்கிட்டாராம்...