Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
05
Feb
கெஸ்ட் ஹவுஸில் கண்ணாடிகளை கழற்றி பாத்ரூமில் இளம்பெண் குளிப்பதை படம்பிடித்த எம்எல்ஏ செக்யூரிட்டி


சித்தூர்: விருந்தினர் மாளிகையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்தார் போலீஸ்காரர். இதையறிந்த அப்பெண்ணின் கணவர், போலீஸ்காரரை சரமாரி  தாக்கி போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் மாவட்டம் நரசாபுரம் தொகுதி எம்எல்ஏவாக  இருப்பவர் கொத்தபள்ளி சுப்பராயுடு. இவர் கடந்த 2 நாட்களாக தனது குடும்பத்தினருடன் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு  சென்றார். அப்போது அங்குள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கினார். எம்எல்ஏவுக்கு பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீஸ்காரரான சிவகுமார்(32) என்பவர்  ஈடுபட்டிருந்தார்.

அப்போது எம்எல்ஏ தனது குடும்பத்தினருடன் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என பாதுகாவலர் சிவகுமாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவகுமார், விருந்தினர்  மாளிகையில் குளிக்க சென்றார். அப்போது பக்கத்து அறையில் யாரோ குளிக்கும் சத்தம் கேட்டது. இதனால் போலீஸ்காரர் சிவகுமார், பாத்ரூமிலிருந்து ஜன்னல்  கண்ணாடிகளை கழற்றி பார்த்துள்ளார். அப்போது அங்கு ஒரு இளம்பெண் குளித்து கொண்டிருந்தார். இதனால் சபலமடைந்த போலீஸ்காரர், தனது செல்போன் மூலம்  இளம்பெண் குளிப்பதை படம் பிடித்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு இதனை கவனித்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

இதையடுத்து விருந்தினர் மாளிகையில் இருந்த அந்த பெண்ணின் கணவர் ஓடிவந்தார். அவர் போலீஸ்காரரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி  பார்த்தார். அதில் தனது மனைவி குளிப்பதை படம் எடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆத்திரமடைந்த அவர், போலீஸ்காரர் சிவகுமாரை தாக்கி, மேற்கு கோதாவரி  மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்தார். அங்கு நடந்த விசாரணையில், போலீஸ்காரர் சிவகுமார் தனது செல்போனில் இளம்பெண் குளிப்பதை படம் எடுத்ததை  ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகளை தெரிவிக்க
singaravelu - thiruvarur
2/5/2025 -- 20:22:28

டில்லியில் மட்டும்தானா.....? நாங்கள் என்ன சளைத்தவர்களா..?....! இது சித்தூரின் கேள்வி...! தமிழ்நாட்டின் பங்கு என்ன சாமானியமானதா...? அன்றாடம் பாலியல் குற்றங்களின் பட்டியல்...ஓகோ...முன்னேறிய மாநிலம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டுமோ...புரியவில்லை..

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran