Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
31
Jan
டுவிட்டரில் குவிகிறது கமலுக்கு ஆதரவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

விஸ்வரூபம் பிரச்னையை தொடர்ந்து கமலுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், பிரபல இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் மட்டுமின்றி ரசிகர்கள், சாமானிய மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் தெரிவிக்கப்பட்ட சிலரின் கருத்துகள் இங்கே..

கமல் மகள் ஸ்ருதி ஹாசன்: ஒரு கலைஞன் என்ற வகையில் எனக்கு ரோல்மாடலாக இருப்பவர் அப்பா. இந்த படத்துக்காக 100 சதவீதத்துக்கும் அதிகமாக உழைத்திருக்கிறார். படைத்த படைப்பை வெளியிட கூடாது என்று கூறுவது ஒரு கலைஞனின் அடிப்படை சுதந்திரத்தை பறிக்கும் செயல். அவருக்கு நீதி கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்.

அரவிந்தசாமி: இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, எல்லாரும் என்ன நினைக்கிறார்கள்.. என்ன செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் யோசிக்க என்னால் முடியவில்லை. என்னால் கன்ட்ரோல் பண்ணவே முடியவில்லை. எதுவாக இருந்தாலும் எங்கள் ஆதரவு கமலுக்கு என்று தீர்மானித்தேன். அதை நேரில் சொல்லிவிட்டு வந்தேன்.

மாதவன்: தமிழகத்தை பார்த்து உலகமே சிரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. சாதாரண விஷயத்தை பெரிதாக்கிவிட்டார்கள். விஸ்வரூபம் என்பது வெறும் சினிமா அல்ல. நியாயமான உரிமைக்காக எழுப்பப்படும் குரல் என்பது எந்த எதிர்ப்புகளையும் மீறி ஒலிக்க வேண்டும். இல்லாவிட்டால் அமைதியான, முன்னேறுகிற நாடாக நாம் ஆக முடியாது. கமல் சாருக்காக நெஞ்சுருகுகிறேன்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மகள் வரலட்சுமி: கமல் சாருக்கு நியாயம் மறுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு நியாயம் கிடைக்க நடிகர் சங்கம் ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? கமல் சாருக்கு ஆதரவு எப்போதும் உண்டு.

சித்தார்த்: தமிழ் சினிமாவின் சகாப்தமாக விளங்கும் கமல் சார் திவாலாவதாகவும் நாட்டை விட்டு போகப்போவதாகவும் கூறுவது அதிர்ச்சி தருகிறது. திரைக்கு வரும் முன்பே ஒரு படத்தை நிறுத்துவதும் ரிலீசான இடங்களில் பாதியோடு நிறுத்தியதும் மிகமிக தவறு. இது சோகமான நாள்! அதிர்ச்சியூட்டும் வாரம்!! தலிபான் தமிழ்நாடு!!!

பிரகாஷ் ராஜ்: மதச்சார்பு இல்லாத ஒருவருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை இந்த சூழல் காட்டுகிறது. ஆனால், பயத்தின் காரணமாக எல்லாரும் அமைதிகாக்கிறார்கள். அமைதியாக இருந்தாலும், உறுதியுடன் இருப்போம். நீதிக்கான அமைதிப் போராட்டம் தொடரும்.

அனுபம் கெர்: சென்சார் போர்டு தலைவராக இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்ததை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அடிமையாகி இருந்தே நமக்கு பழகிவிட்டது. முன்பு முகலாயருக்கு.. பிறகு ஆங்கிலேயருக்கு.. இப்போது நமக்கு நாமே. இந்தியர்கள் நமக்கு முதுகெலும்பு இல்லை.. வெட்கமும் இல்லை.

கருத்துகளை தெரிவிக்க
naga - coimbatore
1/31/2013 -- 15:18:58

கமல் வின் கேரண்டி.

R Jayaraman - Bangalore
1/31/2013 -- 15:57:58

ஒரு நல்ல தமிழ் கலைஞ்சனை வாழ விடுங்கள். இதை அரசியல் ஆக்க கூடாது என்று அனைவருது விருப்பம். ஆகையால் உடனடியாக படத்தை வெளிவிடவீண்டும்.

R Jayaraman - Bangalore
1/31/2013 -- 15:58:3

ஒரு நல்ல தமிழ் கலைஞ்சனை வாழ விடுங்கள். இதை அரசியல் ஆக்க கூடாது என்று அனைவருது விருப்பம். ஆகையால் உடனடியாக படத்தை வெளிவிடவீண்டும்.

Raja - Chennai
1/31/2013 -- 16:4:7

கமல் சார் அவர்களே, நீர் கலை மகளின் மூத்த பிள்ளை....தாங்கள் எதற்கும் கலங்க வேண்டாம்...ஜெயிக்க போறது நீங்கள் தான்.....நீங்கள் பனங்காட்டு நரி ..இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச வேண்டாம்!!.

Kamalin Parama Rasikan - DohaQatar.
1/31/2013 -- 16:10:14

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என (அறிஞர் அண்ணா) சொல்லுக்கு எடுத்துக்காட்டு தான் கமலஹாசன் அவர்கள் (வெற்றி நிச்சயம்)

anand s - chennai
1/31/2013 -- 16:50:0

தமிழ் சினிமா வரலாற்றில் துக்கமான நள் கமலுக்கு எனுடைய முழு ஆதருவு உண்டு சத்தியமா இந்த படம் 100 நள் ஓடும் 100ரவது நள் வல்துகுற நன் மீண்டும் கருத்துகளை பதிவு

chitrarasu - manni
1/31/2013 -- 16:57:55

vishwaroopam படம் வெற்றி பெற முழு ஆதரவு களை மாகாண கலங்காதே சத்தியம் மீண்டும் ஜெய் இகும்

jeyaraj vi.ci. - chennai
1/31/2013 -- 22:21:58

எல்லாம் வோட்டுக்காக...அம்மா செய்வது அதற்காகத்தான்...

ayyappan - mumbai
1/31/2013 -- 23:49:43

ஜெயலலிதா அம்மையாரே அரசியல் வேண்டாம் ஒரு உண்மையான கலைங்க்னோடு, கமலை அளிக்க நினைத்தால் நீங்கள் அழிவீர்கள்

ramesh - paramakudi
2/1/2025 -- 7:45:40

கமல் நோ தமிழ் நோ தமிழன் நோ ஜெயலலிதா வெரி நோ குட்

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement