Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
21
Jan
காதல் செய்திருக்கிறேன்: ஆண்ட்ரியா ஒப்புதல்


‘என் வாழ்க்கை என் கையில் இல்லை. ஒரு காலத்தில் நான் காதலித்திருக்கிறேன்’ என்றார் ஆண்ட்ரியா.
‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படங்களில் நடித்த ஆண்ட்ரியா கமலுடன் ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்துள்ளார். தமிழையடுத்து மலையாளத்தில் அறிமுகமாகிறார். அவர் கூறியதாவது:

தமிழைத் தொடர்ந்து மலையாளத்தில் ‘அன்னாயும் ரசூலும்’ படத்தில் அறிமுகமாகிறேன். முதன்முறையாக கிராமத்து பெண் வேடம். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நான் டப்பிங் பேசி இருக்கிறேன். சிலருக்கு டப்பிங் குரலும் கொடுத்திருக்கிறேன். ஆனால் மலையாளத்தில் டப்பிங் பேசுவது கடினமாக இருந்தது. குறிப்பிட்ட பாத்திரத்துக்கு எனது குரல் பொருத்தமாக இல்லை என்று இயக்குனர் கூறினார். எனவே வேறு ஒருவர் டப்பிங் பேசினார். விரைவில் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறேன்.

என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் விரிவாக திட்டமிடும் வாய்ப்பு என் கையில் இருந்தது. இப்போது மாறிவிட்டது. எதுவுமே நான் திட்டமிட்டபடி நடக்காமல் மாறிப்போகும்போது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூற முடியாது. எதையும் தேடிக்கொண்டு செல்லும் பழக்கம் என்னிடம் கிடையாது. எதை செய்ய வேண்டும் என்பது ஏற்கனவே தயாராக இருக்கிறது. அதில் எது தேவையோ அதை மட்டும் செய்துவிட்டு செல்ல வேண்டும். திருமணத்தைப்பொருத்தவரை ‘லவ்’வின் அடுத்த பரிமாணம் என்று கருதுகிறேன். ஒரு காலத்தில் நான் காதல் செய்திருக்கிறேன். எனக்கு எது சரியாகப்படுகிறதோ அதை தேர்வு செய்கிறேன். என்னை மணப்பவர் நேர்மையானவராக இருக்க வேண்டும். இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana