Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
16
Jan
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் டோனி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கொச்சியில் இங்கிலாந்துக்கு எதிராக 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 127 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு கேப்டன் டோனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர் 66 பந்துகளில் 72 ரன் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும். 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியா இருந்த போது டோனி களத்தில் இறங்கினார். அவரது நிதானமான ஆட்டமும், அதிரடியான வேகமும் இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்து சென்றது.

அவருடைய ஆட்டத்தை இங்கிலாந்து கேப்டன் குக் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது: நெருக்கடியான சூழ்நிலையிலும் கடைசி நேர பரபரப்பிலும் உலகில் சிறப்பாக ஆடக்கூடிய ஒரே வீரர் டோனி தான். பல நேரங்களில் இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியா இருந்தபோது வலுவான நிலைக்கு எடுத்து சென்றிருக்கிறார். அவர் பார்மில் இருக்கும் நேரத்தில் அவருக்கு பந்துவீசுவது ரொம்ப கடினம். பந்தை வேகமாக அடிப்பதில் வல்லவர். ஆப் ஸ்பின்னர்கள் அவருக்கு பந்துவீசுவது ரொம்ப கடினம். நாங்கள் பல முறை இதை பார்த்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

டோனியின் கடைசி 5 ஆட்டங்கள்

ரன்    பந்து    4    6    எதிரணி    இடம்    முடிவு
113*    125    7    3    பாக்.    சென்னை    தோல்வி
54*    89    4    1    பாக்.    கொல்கத்தா    தோல்வி
36    55    1    3    பாக்.    டெல்லி    வெற்றி
32    25    -    4    இங்கி.    ராஜ்கோட்    தோல்வி
72    66    7    2    இங்கி.    கொச்சி    வெற்றி

கருத்துகளை தெரிவிக்க
manokandan - chenni
1/16/2013 -- 21:16:29

தோனி குட் கப்டன்

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran