நிலாவை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்புகிறது ரஷ்யா
நிலவை ஆராய்ச்சி செய்ய ஆளில்லா விண்கலத்தை 2015ம் ஆண்டு அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
நிலவில் தண்ணீர் உள்ளதா, அங்குள்ள சீதோஷ்ண நிலை என்ன, மனிதன் அங்கு உயிர் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் 2015ம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை அனுப்பி நிலவை ஆராய்ச்சி செய்ய ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்துக்கு Ôலூனா குளோப்Õ அல்லது Ôமூன் குளோப் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று விண்வெளி ஆய்வு நிறுவனம் ரோஸ்கோமாஸ் இயக்குனர் விளாடிமிர் போபோவ்கின் கூறினார்.
விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் அமுர் பகுதியில் புதிய ஏவுதளத்தை ரஷ்யா கட்டி வருகிறது. அந்த இடத்தில் இருந்து ராக்கெட் மூலம் லூனா குளோப் நிலவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று விளாடிமிர் கூறினார். நிலவில் தரையிறங்கி இந்த விண்கலம் ஆய்வு செய்யும். அங்கு விண்கலம் சேகரிக்கும் சேம்பிள்களின் ரசாயன தன்மை குறித்து தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனுக்குடன் தகவல் அனுப்பி வைக்கும் என்று விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.