கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு அருகே உள்ள பம்பாஜி குளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (50). அங்குள்ள ரைஸ் மில்லில் கூலி தொழிலாளி. இவரது நண்பர் ரமேஷ் (34). இவர் ஆந்திரா சத்தியவேட்டை சேர்ந்தவர். இருவரும் நேற்று மீஞ்சூருக்கு பைக்கில் சென்றனர். கவரைப்பேட்டை அருகே வந்தபோது நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி பைக் மீது மோதியது. கோவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த ரமேஷ், சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து, கும்மிடிப் பூண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook