திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நசரத்பேட்டையில் உள்ள ஹரிபிரியா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பொறுப் பாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை தாங்கி பேசினார். பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் நடுக்குத்தகை ராஜி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரபு கஜேந்திரன், தட்சணாமூர்த்தி, உதயசூரியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கன்னிகை ஸ்டாலின், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்தமிழ் செல்வன், துணை அமைப்பாளர்கள் அருண்குமார், செந்தாமரை, பிரகாஷ், பொன்.புனிதவராஜன் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட நிர்வாகிகள் என்.எம். துரைசாமி, விஸ்வநாதன், நீலகண்டன், காயத்திரி ஸ்ரீதரன், வக்கீல் ஆதாம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திமுக இளைஞரணி சார்பில் பொங்கல் விழாவையொட்டி இளைஞர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். இளைஞரணியில் உறுப்பினர்களை சேர்ப்பது, ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தெருமுனை கூட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய, நகர இளைஞரணி நிர்வாகிகள் நரேஷ்குமார், சுகுமார், திராவிட தேவன், மோகன சுந்தரம், சதீஷ், புவனேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் பூவை மோகன் நன்றி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook