திருவள்ளூர் திருவள்ளூர் நகராட்சி முகமது அலி தெருவில் நேற்று இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் ரவிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சந்திரசேகர், வட்டாட்சியர் புண்ணிகோட்டி முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகரமன்ற தலைவர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் பி.வி.ரமணா கலந்துகொண்டு பொங்கல் பை மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கி பேசினார். இதில், அதிமுக நகர செயலாளர் கந்தசாமி, இளைஞரணி செயலாளர் வேல்முருகன், பேரவை செயலாளர் லோகநாதன், நேசன், குமரேசன், சூரியகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுபோல், பூண்டி ஒன்றியம் பென்னலூர்பேட்டையில் நடந்த இலவச வேட்டி, சேலைவ வழங்கும் விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் அம்மு மாதவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் வெங்கட்ரமணா முன்னிலை வகித்தனர். அமைச்சர் ரமணா கலந்துகொண்டு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.