ஆம்லா சதம் விளாசல் தெ.ஆ. 325 ரன்குவிப்பு
தென் ஆப்ரிக்கா நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் நேற்று போர்ட் எலிசபெத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்மித் 54, பீட்டர்சன் 21, காலிஸ் 8, டிவிலியர்ஸ் 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆம்லா சிறப்பாக ஆடி சதம் அடித்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. ஆம்லா 106, டூபிளஸ்சிஸ் 69 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் 2, வாக்னர், ஜீத்தன்படேல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்