சச்சின் கோரிக்கை நிராகரித்தது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ரஞ்சி போட்டியில் மும்பை அணிக்காக ஆடிவருகிறார். அந்த அணி தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி ஆட்டம் வருகிற 16ந் தேதி முதல் 21ந் தேதி வரை டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆட்டத்தை மும்பைக்கு மாற்ற வேண்டுமென சச்சின் கோரிக்கை விடுத்தார். இதனை பிசிசிஐ ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.