சோமனூர் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகள் மட்டும் 2 லட்சத்துக்கும் மேல் உள்ளன. 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடுமையான மின்வெட்டால், விசைத்தறி தொழில் வெகுவாக பாதித்துள்ளது. சமச்சீர் மின்சாரம், மின்கட்டண உயர்வு ரத்து, கைத்தறி சட்டத்தில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9ம்தேதி முதல் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக் செய்து வருகின்றனர். இரு மாவட்டங்களிலும் 90 சதவீத விசைத்தறிகள் மூடப்பட்டன. இன்று 4வது நாளாக வேலைநிறுத்தம் நீடிக்கிறது. ஸ்டிரைக் காரணமாக கடந்த 4 நாட்களாக ரூ.14 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook