ரூ.42 லட்சம் மோசடி ஏட்டு மகன் கைது
கோவை: கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் நடராஜன். ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு. இவரது மகன் லோகநாதன்(39), தனது வீட்டை விற்க முடிவுசெய்தார். அதே பகுதியை சேர்ந்த உக்கிரபாண்டி (46) என்பவரிடம் ரூ.56.8 லட்சத்துக்கு விலை பேசினார். ஒப்பந்தமும் போடப்பட்டது. உக்கிரபாண்டி முழு தொகையையும் செலுத்திவிட்டார். ஆனால், பத்திரம் பதிவுசெய்து கொடுக்காமல் லோகநாதன் இழுத்தடித்தார். இதற்கிடையில், உக்கிரபாண்டி, ‘எனக்கு வீடு வேண்டாம், பணத்தை திருப்பிக்கொடுங்கள்‘ என கேட்டார். ரூ.15 லட்சம் மட்டும் திருப்பிக்கொடுத்துள்ளார். மீதி பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து உக்கிரபாண்டி கடந்த 17.3.2025 அன்று பீளமேடு போலீசில் புகார்செய்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து ஓராண்டு காலமாக விசாரணை நடத்தி நேற்று லோகநாதனை கைதுசெய்தனர்.