அமெரிக்க பள்ளியில் மீண்டும் துப்பாக்கி சூட்டுக்கு 2 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்க பள்ளியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்ததில் 2 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூடவுண் நகரில் உள்ள சாண்டி ஹூக் பள்ளியில் சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையின் மகன் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உள்பட 26 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள கெர்ன் கவுன்டியில் உள்ள டப்ட் உயர்நிலை பள்ளியில் நேற்று காலை 9 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்தது. மாணவன் ஒருவனே ஷாட்கன் மூலம் சுட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 2 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களின் பெயர், வயது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதாக கெர்ன் கவுன்டி போலீசார் தெரிவித்தனர். வேறு தகவல்கள் எதுவும் தெரியவில்லை.